Home> India
Advertisement

’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்

Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.

’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்ற ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அம்மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், ராமர் கோயில் இருக்கும் அயோத்தியா தொகுதியில் பாஜகவை  தோற்கடித்ததுபோல், குஜராத் மாநிலத்திலும் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர்களை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும் என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை  விழாவுக்கு அப்பகுதி மக்கள் அழைக்கப்படவில்லை, ஏர்போர்ட் கட்டுவதற்காக நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு பாஜக உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, " அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வில் அதானியும், அம்பானியும் காணப்பட்டனர். ஆனால் ஏழைகள் யாரும் அங்கு காணப்படவில்லை. குஜராத்தில் பாஜகவினர் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தி, கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். எங்கள் கட்சி அலுவலகத்தை உடைத்த நிலையில், காங்கிரஸ் கட்சி அவர்களின் அரசாங்கத்தை உடைக்கப்போகிறது. கடந்த முறை வெறும் 3 மாதத்தில் கடுமையாக உழைத்து நல்ல ரிசல்டை பெற்றோம். இந்தமுறை குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு 3 வருடங்கள் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை நீங்கள் அமைக்கப் போகிறீர்கள்." என கூறினார். 

மேலும் படிக்க | மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை பாஜக தொண்டர்கள் தாக்கியபோது, காயமடைந்த 7 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் தெரிவித்தார். மேலும், வதோதரா படகு கவிழ்ந்த விபத்து, மோர்பி பாலம் இடிந்து விழுந்தபோது உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும்  ராகுல்காந்தி சந்திக்க உள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, 2027 ஆம் ஆண்டு குஜராத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என ராகுல் காந்தி பேசினார். அம்மாநிலத்தில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கும் என்றும் சூளுரைத்த நிலையில், இன்று குஜராத் மாநிலத்துக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். இதன்மூலம் மிசன் குஜராத் பயணத்தை இன்றே தொடங்கிவிட்டார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குஜராத்தைப் பொறுத்தவரை பாஜக இந்தியாவிலேயே மிகவும் வலுவாக இருக்கக்கூடிய மாநிலமாகும். அங்கு அக்கட்சியே தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஓரளவு சிறப்பாக செயல்பட்டு 70க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்ற நிலையில்,2022 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால், 2027 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார் ராகுல்காந்தி. 

மேலும் படிக்க |  121 பேரை காவு வாங்கிய ஹத்ராஸ் சம்பவம்... வாய் திறந்தார் போலே பாபா - என்ன சொன்னார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More