Home> India
Advertisement

பஞ்சாப் தேர்தலில் படுதோல்வி...பதவி விலகிய சித்து

பஞ்சாப் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்தலில் படுதோல்வி...பதவி விலகிய சித்து

உத்தரபிரதேசம்,  உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்விக்கான காரணங்களைப் பற்றி விவாதிக்க, காங்கிரஸ்  கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான மாற்றங்கள் குறித்து  விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பதவி விலக கட்சித்தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | நாளை ஆளுநரை சந்திக்கும் பகவந்த் மான்...ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்..

தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும்,  நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, அமரீந்தர் சிங் பதவி நீக்கப்பட்டு சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சித்துவுக்கும், சரண்ஜித் சிங் சிங் சன்னிக்கு இடையேயும் கருத்து வேற்பாடு ஏற்பட்டது. இந்த தொடர் உட்கட்சி பூசல்கள் பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் விரும்பியபடி தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து
விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் ஏற்கனவே தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், பிற மாநில காங்கிரஸ் தலைவர்களும் பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | பஞ்சாப்பில் யார் ஆட்சி? கருத்து கணிப்பில் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More