Home> India
Advertisement

காந்தி குடும்பத்தை பற்றி பேசுவதை விட மக்களை பிரச்சனை பற்றி பேசுங்கள்: பிரியங்கா

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது 50 சதவீதம் எங்கள் குடும்பத்தை பற்றியே பேசுகிறார். மக்களை பிரச்சனை பற்றி பேசுவதில்லை என விமர்சித்துள்ளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

காந்தி குடும்பத்தை பற்றி பேசுவதை விட மக்களை பிரச்சனை பற்றி பேசுங்கள்: பிரியங்கா

ஃபதேபூர்: உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையான, நரேந்திர மோடியை தாக்கி பேசினார். அப்பொழுது "மக்கள் பிரச்சனைகளை பற்றி எதுவும் பேசாமல் எப்பொழுதும் காந்தி குடும்பத்தை பற்றி மட்டும் பேசி வருகிறார் பிரதமர் மோடி. மக்கள் பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பதே பாஜக-வின் நிலை" எனக் கடுமையாகச் சாடினார்.

இன்று ஃபதேபூர் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு என்ன ஆயிற்று, அவர் சரியான நிலையில் தான் இருக்கிறாரா? எப்பொழுதும் என் குடும்பத்தை பற்றி மட்டும் பேசி வருகிறார். நேருஜி என்ன செய்தார், இந்திரா காந்தி என்ன செய்தார் என அவரின் தேர்தல் பிரசாரத்தில் 50 சதவீதம் எங்கள் குடும்பத்தை பற்றியே இருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து வருடமாக அவர் என்ன செய்தார் என்பதை குறித்து அவர் பேசவே மாட்டார்.

கடந்த ஐந்து வருடத்தில் அவர் வெளிநாடுகளில் தான் அதிகம் சுற்றி உள்ளார். மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எப்பொழுதாவது சாதாரண மக்களை சந்தித்து இருக்கிறாரா? மோடி. அவர் பணக்காரர்களுக்கு தான் வேலை பார்க்கிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கான கட்சி. ஏழைகள் பயன்பெறும் வகையில் ராகுல் காந்தி "நியாய்" திட்டத்தை அறிவித்தார். வாக்காளர்கள்... தங்கள் பிரச்சினைகளைப் பற்றி எந்த கட்சி பேசுகிறதோ, அந்த கட்சியை தேர்ந்தெடுங்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் கட்சியை தேர்வு செய்யுங்கள். 

"அரசியலை மாற்றுங்கள் ... உங்களுடைய சொந்த பகுதிக்கு மட்டுமல்ல ... நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் நாட்டை காப்பாற்றவும்."

"பொய்யான அரசியல் செய்யும் கட்சிகளை புறக்கணித்து விடுங்கள். பா.ஜ.க.வின் அரசியல் மக்களுக்கான அரசியல்ல. அவர்கள் மக்களிடம் பிரச்சனைகளை குறித்து பேசுவதில்லை. மக்களின் நலனில் பிஜேபி-க்கு அக்கறை இல்லை. பிஜேபி ஆட்சி காலத்தில் விவசாயிகளும், இளைஞர்களும் ஒடுக்கப்பட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அற்றவர்களாக இருந்தார்கள். 

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

Read More