Home> India
Advertisement

ராமர் பக்தி, ரஹீம் பக்தி எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி

ராமர் பக்தி, ரஹீம் பக்தி எதுவாக இருந்தாலும், இது பக்தி உணர்வை வலுப்படுத்தும் நேரம் என பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி தீர்ப்பு குறித்து கூறினார். 

ராமர் பக்தி, ரஹீம் பக்தி எதுவாக இருந்தாலும் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் (Ayodhya case) உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நீதித்துறை (Supreme court) இந்த தீர்ப்பு மூலம் சாமானியரின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தி உள்ளது என்றும், அனைவருக்கும் அமைதியை நிலை நாட்டுமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. அயோத்தியில் (Ayodhya) சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று உச்சநீதிமன்றம் தனது முடிவில் கூறியுள்ளது. 5 ஏக்கர் மாற்று நிலம் முஸ்லிம் தரப்புக்கு தனித் தனியாக வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "அயோத்தியா விவகாரம் குறித்து தீர்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த முடிவை யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக்கூடாது. ராமர் பக்தி அல்லது ரஹீம் பக்தி எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் பக்தியின் உணர்வை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும் என்பதே நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள் எனக் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு பல காரணங்களுக்காக முக்கியமானது. ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதில் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு தரப்பினருக்கும் அதன் வாதங்களை முன்வைக்க போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. நீதித்துறை பல தசாப்தங்களாக பிரச்சனையாக இருந்த வந்த பழமையான வழக்கில் இணக்கமாக தீர்த்துள்ளது. 

பிரதமர் மோடி கூறுகையில், "இந்த முடிவு நீதித்துறை செயல்முறைகளில் சாமானிய மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சகோதரத்துவ உணர்வின் படி, 130 கோடி இந்தியர்களும் இருப்பது குறித்து பெருமை படவேண்டும் எனக் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் சிறப்பம்சங்கள்:-

> சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது தனக்கு ஏகபோகம் இருந்தது என்பதை முஸ்லிம் தனது ஆதாரங்களிலிருந்து நிரூபிக்க முடியவில்லை.
> அயோத்தி தீர்ப்பில் அகழ்வாராய்ச்சியில் இஸ்லாமிய கட்டமைப்பிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) கூறினார்.
> பாபர் மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன்பு இந்த இடம் தங்களுக்கு உரிமையானது என்பதை நிரூபிக்க முஸ்லிம் தரப்பு தவறி விட்டது.
> ஏஎஸ்ஐ (ASI)அறிக்கையை நிராகரிக்க முடியாது. ஏ.எஸ்.ஐ அறிக்கையில் 12 ஆம் நூற்றாண்டு கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
> அயோத்யா தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிக்க முடியாது என்று சி.ஜே.ஐ. கூறினார்.
> மசூதி வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை என்பதை ஏ.எஸ்.ஐ அறிக்கை நிரூபிக்கிறது.

Read More