Home> India
Advertisement

UAE-ன் உயரிய விருதினை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது அளிக்கப்பட்டது!

UAE-ன் உயரிய விருதினை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது அளிக்கப்பட்டது!

G-7 மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்திற்கு சென்றார்.

அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சாயத் அல் நஹ்யானை  பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள், சர்வதேச நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து,  ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயாத் விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது. 

பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 22-ஆம் தேதி துவங்கினார். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்த வகையில் பிரான்ஸ் சென்ற மோடி, அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரதமர் பிலிப்பி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பிரான்சில் உள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற மோடி, அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானை சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

தொடர்ந்து பஹ்ரைன் செல்லும் மோடி, அந்நாட்டு இளவரசர் ஷேக் கலிபா பின் சல்மான் அல் கலிபா, மன்னர் ஷேக் ஷமான் பின் இசா அல் கலிபா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசுவார். பின்னர் 25-ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, பியாரிட்ஸ் நகரில் நடக்கும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். உச்சி மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More