Home> India
Advertisement

டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழா

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த  "லடாக் நுழைவாயில்"  என அழைக்கப்படும் டிராஸ்  பகுதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடுகிறார். 

டிராஸ் பகுதியில் குடியரசுத் தலைவர் ராணுவ வீரர்களுடன்  விஜயதசமி விழா

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதியில், "லடாக் நுழைவாயில்"  என அழைக்கப்படும் டிராஸ்  பகுதியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடுகிறார். அங்கு கார்கில் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார். 

"லடாக் நுழைவாயில்"  என அழைக்கப்படும் டிராஸ்  பகுதி  அதன் உயரமான மலையேற்ற பாதைகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு புகழ் பெற்றது. இது ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் பகுதியாகும். இந்திய இராணுவ வீரர்கள் ஆண்டு முழுவதும் உறைபனி  நிலவும் இந்த இடத்தில், நாட்டை காக்க தொடர்ந்து பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா-சீனா இடையே எல்லைப் பகுதிகளில்  பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் எல்லைப்பகுதிகளில் பணிபுரியும் நம் இந்திய வீரர்கள் பனியும் , கடுமையான தட்பநிலையில் நம் தாய் நாட்டை பாதுகாக்க இரவு பகலாக கண் விழித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்களுடன் விஜயதசமி கொண்டாடுகிறார்.

சென்ற ஆண்டும் நம் ராணுவ வீரர்கள் விஜயதசமி நிகழ்ச்சியை மிக சிறப்பாக கொண்டாடடினர்.  சென்ற ஆண்டு விஅயதசமி என்னும் தசரா விழாவில் பங்கேற்க  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிக்கிம்  சென்று ராணுவ வீரர்களுடன் மிக சிறப்பான முறையில்  கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | பாகிஸ்தான் திருந்தவில்லை என்றால், மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமித் சா எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More