Home> India
Advertisement

Ex CJI ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்: இந்திய ஜனாதிபதி உத்தரவு

முன்னாள் இந்திய உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.

Ex CJI ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்: இந்திய ஜனாதிபதி உத்தரவு

புது டெல்லி: இந்திய முன்னாள் தலைமை நீதிபதி (Chief justice of India) ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) திங்கள்கிழமை (மார்ச் 16) அன்று மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (Ramnath Kovind) நியமனம் செய்துள்ளார் என்று அரசு அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அந்த அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 80 வது பிரிவின் உட்பிரிவின் துணைப்பிரிவால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நியமன எம்.பி. பதிவி காலியாக உள்ளதால், அந்த இடத்திற்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டு உள்ளது.
 
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்களை நியமிக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

fallbacks

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என சொல்லுவார் என எதிர்பார்கிறேன். ஒருவேளை அவர் அப்படி செய்யவில்லை என்றால், அது நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை அவர் ஏற்படுத்தியதாக அமைந்துவிடும் என்று  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

நவம்பர் 17, 2019 அன்று ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகோய், இந்தியாவின் 46 வது தலைமை நீதிபதியாக 2018 அக்டோபர் 3 முதல் - 2019 நவம்பர் 17 வரை பணியாற்றினார்.

ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) தனது ஆட்சிக் காலத்தில் பல வரலாற்று தீர்ப்புகளை வழங்கினார். இதில் அயோத்தி ராம் ஜன்மபூமி பாப்ரி மஸ்ஜித் வழக்கு, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் அனுமதி மற்றும் ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை மற்றும் அசாம் என்.ஆர்.சி சர்ச்சை போன்றவை அடங்கும்.

45 வது சி.ஜே.ஐ (CJI) தீபக் மிஸ்ராவிற்குப் (Dipak Misra) பிறகு ரஞ்சன் கோகோய் (Ranjan Gogoi) தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போதைய இந்திய தலைமை நீதிபதியான சரத் அரவிந்த் போப்டே (Sharad Arvind Bobd) 2019 நவம்பர் 17 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More