Home> India
Advertisement

69_வது குடியரசு தினவிழா: அசோக சக்ரா விருது வழங்கியபோது கண் கலங்கிய ஜனாதிபதி!!

69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். 

69_வது குடியரசு தினவிழா: அசோக சக்ரா விருது வழங்கியபோது கண் கலங்கிய ஜனாதிபதி!!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் போது வீர மரணம் அடைந்த விமானப் படை தளபதி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை நிராலாவின் தாய் மற்றும் மனைவியிடம் வழங்கியபோது ராம் நாத் கோவிந்த் கண் கலங்கினார்

69_வது இந்திய குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

நாட்டின் 69-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 

தேசிய கொடியேற்ற வந்த ஜனாதிபதியை பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா மற்றும் முப்படை தளபதிகள் வரவேற்றனர். பின்னர் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் போது வீரமரணம் அடைந்த விமானப்படையை சேர்ந்த ஜோதி பிரகாஷ் நிராலா என்பவரை கவுரவிக்கும் வகையில், அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். 

அந்த விருதை நிராலாவின் தாய் மற்றும் மனைவியிடம் வழங்கியபோது ராம் நாத் கோவிந்த் கண் கலங்கினார்.

Read More