Home> India
Advertisement

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்

மயக்க நிலையில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கததால் மோட்டார் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்

லதேஹர்: சுகாதாரத் துறையில் பல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்தாலும், நிலைமை இன்னும் திருப்திகரமாக இல்லை. அவ்வப்போது சுகாதாரத் துறையின் அவலநிலை வெளிவந்துக்கொண்டு தான் இருக்கிறது. 

ஜார்க்கண்டின் லதேஹாரில், ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டு நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு ஆம்புலன்ஸ் கூட வரவில்லை. மயக்க நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சைக்காக, கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல மோட்டார் சைக்கிளை நாட வேண்டியிருந்தது. இதற்காக, அந்தப்பெண் 10 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. மயக்க நிலையில் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் எப்படி மோட்டார் சைக்கிளில் சென்றிருப்பார். அவரின் நிலைமை சற்று சிந்தித்து பாருங்கள். இதுபோன்ற அவலநிலை இன்னும் நாட்டில் சில இடங்களில் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

லதேஹர் சதர் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிப் பெண், அங்கு சிகிச்சை ஏற்பாடு செய்யாமல், அந்த கர்ப்பிணிப் பெண்ணை ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். லதேஹர் சதர் மருத்துவமனையில் அனைத்து வித வசதிகளும் இருந்தும் அந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை.

அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், நடக்கக் கூட முடியவில்லை. அந்த பெண் வலியால் துடித்துள்ளார். அப்பொழுது கூட ஆம்புலன்ஸ் வழங்கப்பட வில்லை. 108 நம்பருக்கு போன் செய்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அந்த பெண் கஷ்டப்படுவதை பார்த்த உறவினர்கள், அந்த பெண்ணை பத்து கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஜூன் 27 ஆம் தேதி நடந்துள்ளது.

கடுமையான தாங்கமுடியாத வயிற்று வலி பல மணி நேரம் போராடிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்கிறதா மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

Read More