Home> India
Advertisement

ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.

ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

தன்பாத்: 2019 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் (Jharkhand Assembly Elections 2019) மூன்றாம் கட்டத்திற்கான 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. இதற்கிடையில், பிரதமரும் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) நட்சத்திர பிரச்சாரகருமான நரேந்திர மோடி (Narendra Modi) தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தன்பாத் சென்றடைந்தார். விமான நிலைய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஜார்க்கண்ட் மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார். மீதமுள்ள கட்டங்களில் மேலும் மேலும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் முழு பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன் எனவும் கூறினார்.

தன்பாத் பேரணியில் பிரதமர் மோடி உரையின் சிறப்பம்சங்கள்:

>> தியோகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபட வேண்டும் என அனைவரின் கோரிக்கையை நிறைவேற்றியது யார்? பாஜக அரசு தான் இந்த கோரிக்கையை நிறைவேற்றியது. ஜார்கண்டில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அதில் எங்கள் அரசாங்கம் பணியாற்றியது.

>> காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தன்பாத், தியோகர் மற்றும் ஜார்க்கண்ட் மக்களுக்கு ஏதாவது கொடுத்தது என்றால், அது தூசி, புகை மற்றும் மோசடி. இங்கிருந்து நிலக்கரி தொடர்ந்து எடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் மாசுபாட்டில் இருந்தனர். அவர்கள் கைவிடப்பட்டனர்.

>> காங்கிரஸ்-ஜே.எம்.எம் தலைவர்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் இங்கிருந்து எடுக்கப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தினர். இப்போது பாஜக அரசு ஒவ்வொரு ஏழை மற்றும் வீடற்ற குடும்பங்கள் சொந்த வீடு பெற வேண்டும் என்று முயற்சி எடுத்துள்ளது.

>> உங்கள் ஊழியரான இந்த மோடியை நீங்கள் நம்ப வேண்டும் என்று நான் வடகிழக்கு மாநிலங்களை, குறிப்பாக அசாமின் சகோதர சகோதரிகளிடம் அங்குள்ள இளம் சகாக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். வடகிழக்கின் சகோதர சகோதரிகளின் எந்தவொரு பாரம்பரியமும் மொழியும் வாழ்வின் மீதும் எந்த பிரச்சனை வர விடமாட்டேன்.

>> வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கின் பல்வேறு பிராந்தியங்களின் மரபுகள், அதன் கலாச்சாரம், அந்த இடத்தின் மொழியை மதித்தல், அதைப் பாதுகாத்தல் ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் முக்கியமான குறிக்கோளாகும். 

>> அரசியலைப் பொறுத்தவரை, காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியும் வடகிழக்கு மாநிலத்தில் தீ வைக்க முயற்சிக்கின்றன. பங்களாதேஷில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள் என்ற குழப்பம் அங்கு பரவி வருகிறது. இந்த சட்டம் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகளின் குடியுரிமைக்கானது. 

>> பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் அதிகரித்தபோது, ​​டஜன் கணக்கான கிறிஸ்தவ குடும்பங்களும் எப்படியாவது தங்களைக் காப்பாற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்தன. அவர்களின் மூதாதையர்களும் இந்த பூமியுடன் இணைந்திருந்ததால் அவர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். ஆனால் இந்த மக்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு, காங்கிரஸ் அரசு அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. 

>> இன்று, மில்லியன் கணக்கான ஏழை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட தலித் குடும்பங்கள், சீக்கிய குடும்பங்கள், கிறிஸ்தவ குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்க பாஜக ஒரு சட்டத்தை இயற்றியபோது, ​​காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் அதை எதிர்க்கின்றனர்.

>> பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்கள் பல தசாப்தங்களாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களை அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால் அவர்களுக்கு குடியுரிமை குறித்த வாக்குறுதிகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதை செய்து காடியது பாஜக அரசு தான்.

Read More