Home> India
Advertisement

கரன்சி விவகாரம்: பிரதமர் மனைவி யசோதாபென் பாராட்டு

பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் படேல் மத்திய அரசின் ரூ.500,1000 செல்லாது என்ற முடிவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கரன்சி விவகாரம்: பிரதமர் மனைவி யசோதாபென் பாராட்டு

கோடா: பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் படேல் மத்திய அரசின் ரூ.500,1000 செல்லாது என்ற முடிவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் கோட்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யசோதா பென் படேல் கூறியதாவது:- 

பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டு வாபஸால் இந்தியாவில் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்படும். மேலும் இந்த நடவடிக்கையால் வெளிநாட்டிலுள்ள கருப்பு பணம் மீட்க்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வளர்ச்சிக்க்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறது. மத்திய அரசு இதுவரை சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அதற்கு எனது பாராட்டுக்கள். இது தொடரவேண்டும் என்றும் யசோதாபென் படேல் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பல்வேறு நலத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
இதுவரை அளித்துவந்த சிறப்பான ஆட்சிக்கு எனது பாராட்டுக்கள்' என்றார் யசோதா பென்.

Read More