Home> India
Advertisement

16 முதல் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயம்: மத்திய அரசு

16 முதல் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயம்: மத்திய அரசு

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் சோதனை முயற்சியாக பெட்ரோல் - டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த 5 நகரங்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இந்த 5 நகரங்கள் தவிர மற்ற இடங்களில் பெட்ரோல் - டீசல் விலையை மாதத்திற்கு 2 முறை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை நாடு முழுவதும் வருகிற 16-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் டீசல் விலை நிர்ணயம் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Read More