Home> India
Advertisement

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. இன்று நள்ளிரவு முதல் அமல்

மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் வரி உயர்வு காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்கிறது.

உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. இன்று நள்ளிரவு முதல் அமல்

புதுடெல்லி: சாலை உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலை வரி ரூ.1 மற்றும் உற்பத்தி வரி ரூ.1 என பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மக்களவையில் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்பொழுது, சாலை உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி லிட்டருக்க ரூ.1 கூடுதலாக விதிக்கப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சாலை உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்படும் எனக் குறிப்பட்டார். 

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதாவது நெடுஞ்சாலை வரி ஒரு ரூபாயும், உற்பத்தி வரி ஒரு ரூபாயும் என லிட்டருக்கு ரூ.2 உயர்த்ப்படுகிறது. மேலும் மாநில வரிகளை சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More