Home> India
Advertisement

பார்லே-ஜி - வதந்தியால் விற்றுத் தீர்ந்த பிஸ்கட்டுகள்!

பார்லே-ஜி பிஸ்கட் சாப்பிடாவிட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். என வதந்தியால் விற்றுத் தீர்ந்த பிஸ்கட்டுகள்.

பார்லே-ஜி - வதந்தியால் விற்றுத் தீர்ந்த பிஸ்கட்டுகள்!

பீகார் : பச்சைப் புடவை கட்டினால் கணவனின் ஆயுள் கூடும்,மகளுக்கு மஞ்சள் புடவை கொடுக்கணும்,வீட்டு வாசலில் 7 விளக்கு ஏற்ற வேண்டும் என்பது போன்ற பல மூடநம்பிக்கை வதந்திகளைத் தமிழ்நாட்டில் நாம் கேட்டிருப்போம்.  இந்த மூடநம்பிக்கைகளை நம்பி மக்கள் பலரும் அதனை தவறாது செய்வர்.இதேபோன்று ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

வட மாநிலங்களான பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகையின் போது திருமணமான பெண்கள் 24 மணி நேரமும் நோன்பு இருக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகள் நோயின்றி மகிழ்ச்சியுடன் வாழ இந்த நோன்பு இருக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இந்த நோன்பு பண்டிகை கொண்டாடப்பட்டது.  பீகாரின் சிதாமர்ஹி மாவட்டத்தில் ஜிதியா பண்டிகையில் 'ஆண் குழந்தைகள் பார்லே ஜி பிஸ்கட் சாப்பிடாமல் இருந்தால், அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும்' என்ற வதந்தி வேகமாகப் பரவியது.

fallbacks

இதை பீகார் மக்கள் நம்பி ஏமார்ந்தனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து சமூகவலைதளங்களில் வைரலானது  இதையடுத்து பெற்றோர்கள் கடைகளில் இருக்கும் பார்லே-ஜி பிஸ்கட்டை வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியதால் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க பலரும் கடைகளுக்கு முண்டியடித்தனர்.

திடீரென பார்லேஜி பிஸ்கட்டுக்கு கிடைத்த மவுசால் ரூ.5க்கு விற்பனையாகும் பிஸ்கட்டை ரூ. 50 வரை விற்று பல கடைக்கார்கள் கொள்ளை லாபம் பார்த்தனர். பல கடைகளில் சில நிமிடங்களிலேயே அனைத்து பார்லே-ஜி பிஸ்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.பலர் இந்த பிஸ்கெட்டை பதுக்கி வைத்து மேலும் அதிக விலைக்கு விற்றனர்

மேலும் இந்த மாவட்டம் மட்டுமல்லாது பர்கானியா, தேஹ், நான்பூர், பாஜ்பட்டி, மேஜர்கஞ் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த வதந்தி பரவியதால் பீகார் முழுவதும் பெற்றோர்கள் பார்லே-ஜி பிஸ்கட் வாங்க வீதி வீதியாக அலைந்தனர். இந்த வதந்தி எப்படிப் பரவியது? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  எது எப்படியோ...கடைக்காரர்கள் தங்களிடமிருந்த பிஸ்கட் பாக்கெட் ஸ்டாக்குகளை இதை காரணமாக வைத்து கல்லா கட்டிவிட்டனர்.இதேபோல் ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.

ALSO READ அம்மாவின் மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More