Home> India
Advertisement

நிர்பயாவுக்கு நீதி கிடைக்கவில்லை; தேதி தான் கிடைத்தது; எப்போது முடிவடையும்?

நிர்பயாவுக்கு நீதி கிடைக்கவில்லை, தேதி தான் கிடைத்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதி ஒத்திவைப்பு.

நிர்பயாவுக்கு நீதி கிடைக்கவில்லை; தேதி தான் கிடைத்தது; எப்போது முடிவடையும்?

புதுடில்லி: நிர்பயா பாலியல் வழக்கில் (Nirbhaya Gangrape Case) குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அக்‌ஷய் தாக்கூர் தனக்கு வழங்கப்பட்ட தூக்கி தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிராகரித்தது. மறுபரிசீலனை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அக்‌ஷயின் மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. மறுபுறம் நிர்பயாவின் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணை டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் (Patiala House Court) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். இன்று அனைத்து குற்றவாளிகளுக்கும் சிறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி வரை விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி கூறிய போது நிர்பயாவின் தாய் அழுதார்.

எனவே இப்போது பெரிய கேள்வி என்னவென்றால், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவது என்பது, மனுவின் பெயரில் எவ்வளவு காலம் ஒத்திவைக்கப்படும்? அதாவது, நிர்பயாவின் குற்றவாளிகள் எவ்வளவு காலம் தப்பித்துக்கொண்டே இருப்பார்கள்? மறுபரிசீலனை மனு நிராகரிக்கப்பட்துள்ளதால், குற்றவாளிகள் எப்போது தூக்கிலிடப்படுவார்கள் என நாட்டு மக்கள் கேட்கிறார்கள். மனிதகுலத்தின் எதிரிகள் சட்டத்திலிருந்து எவ்வளவு காலம் தப்பிப்பார்கள்? நீதிக்காக நாடு எவ்வளவு காலம் காத்திருக்கும்?

நிர்பயாவின் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர்:
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத வரை ஆறுதல் ஏற்படுவது இல்லை என்று நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறினார். இது கொஞ்சம் வேதனையாக தான் இருக்கிறது.

மறுபுறம், நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட முடிவை நான் வரவேற்கிறேன். நீதி கிடைக்க இன்னும் ஒரு படி உள்ளது. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். இங்கேயும், அவர்கள் எப்போது தூக்கிலிடப்படுவார்கள் என்ற ஆவலுடன் இருக்கிறேன். அவர் மேலும் கூறுகையில், "நான் 7 ஆண்டுகளாக போராடி வருகிறேன். நான் 1 வருடமாக பாட்டியாலா நீதிமன்றத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நீதிமன்றம் இன்னும் உரிமையை வழங்கவில்லை. குற்றவாளிகளின் உரிமையை பற்றி பேசும் நீதிமன்றம், எங்களின் உரிமைகளை பேசவது இல்லை. நீதிமன்றம் சனவரி 7 ஆம் தேதி வழங்கியுள்ளது. அன்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என எந்த உத்தரவாதமும் இல்லை எனக் கூறினார். 

நிர்பயாவின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா பேசுகையில், 2020 ஜனவரியில் இந்த விவகாரம் முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு கிடைக்கும் எனக் கூறினார்.

நிர்பயாவின் குற்றவாளி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
அக்‌ஷய் தாக்கூர்
வயது 33 வயது
பஸ் உதவியாளர்
பீகாரில் இருந்து வந்தவர்

பவன் குப்தா
வயது 23 வயது
பழ விற்பனையாளர்
டெல்லியில் வசிப்பவர்

வினய் சர்மா
வயது 24 வயது
உடற்தகுதி பயிற்சியாளர்
டெல்லியில் வசிப்பவர்

முகேஷ் குமார்
வயது 30 வயது
பஸ் கிளீனர்
தோஷி ராம் சிங்கின் தம்பி

கற்பழிப்பு குற்றவாளியின் "வெட்கக்கேடான வேண்டுகோள்":
மரண தண்டனை என்பது மனித உரிமை மீறல்
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுவது வெறும் அரசியல் காரணத்துக்காக...
கோட்ஸே பாபுவைக் கொன்றார், அது தெளிவாக இல்லை. இந்த விஷயத்தில் அது நடக்கக்கூடாது
இந்தியா அகிம்சை நாடு, தூக்கிலிட வேண்டாம்
டெல்லியின் மாசு ஏற்கனவே வயதில் குறைந்து வருகிறது
கலியுகத்தில் மக்கள் மிகக் குறைந்த நாளே வாழ்கின்றனர்
பாதிக்கப்பட்டவர் செல்வாக்கின் கீழ் இருந்தார், அவரது அறிக்கை எவ்வாறு சாத்தியமாகும்?
பலவீனமானவர்களுக்கு உதவ நீதிமன்றம் வேலை செய்ய வேண்டும்.
நிர்பயாவின் நண்பர் பணத்தை எடுத்துகொண்டு, அவரை தனியாக அனுப்பியதாக கூறினார்.

நிர்பயாவுக்கு நீதி கிடைக்கவில்லை. தேதி தான் கிடைத்து வருகிறது:
16 டிசம்பர் 2012: டெல்லியில் நிர்பயாவை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது
21 டிசம்பர் 2012: அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளும் 5 நாட்களுக்குள் பிடிபட்டனர்
11 மார்ச் 2013: நிர்பயா வழக்கில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் தற்கொலை செய்து கொண்டார்
13 செப்டம்பர் 2013: கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
05 மே 2017: குற்றவாளிகளின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
6 டிசம்பர் 2019: கற்பழிப்பு குற்றவாளிகளின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது
18 டிசம்பர் 2019: குற்றவாளி அக்‌ஷய் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
7 ஜனவரி 2020: குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற மனு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More