Home> India
Advertisement

ரயில்,மெட்ரோ,பேருந்து- டிச.,10க்கு பிறகு பழைய நோட்டு செல்லாது

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

ரயில்,மெட்ரோ,பேருந்து- டிச.,10க்கு பிறகு பழைய நோட்டு செல்லாது

புதுடெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி கூறினார்.

ரூ.500 நோட்டுகளை குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டும் வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசு ஒரு புதிய அறிக்கை வெளிபடித்தயுள்ளது. பழைய 500 ரூபாய் ரயில்வே, பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டு பயன்படுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. 

பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 3-ம் தேதி பிறகு பெட்ரோல் பங்க், விமான டிக்கெட்டுகளுக்கு பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரயில்வே, பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளுக்கும் பழைய 500 ரூபாய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More