Home> India
Advertisement

பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதினை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் தனது குடியரசு தின உரையினை நிகழ்த்திய போது இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா. இவருக்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக சேவை ஆற்றியதற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார் எழுத்தாளர் கீதா மேத்தா.

இது குறித்து அவர் கூறிகையில், "பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவர் என்று இந்திய அரசு என்னை தேர்வு செய்ததற்கு ஆழ்ந்த பெருமிதம் அடைகிறேன். ஆனால், இந்தியாவில் பொதுத்தேர்தல் வர இருப்பதால், இந்த சமயத்தில் இந்த விருது எனக்கு வழங்கப்படுவது சலுகையாக தான் தெரிகிறது. இந்த விருதை தற்போது நான் ஏற்றால், என் மீதும் அரசு மீதும் ஒரு தவறுதலான புரிதலை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக நானும் மிகவும் வருந்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

அவர் ஒரு இந்திய குடிமகன் என்றும், இந்திய பாஸ்போர்ட் வைத்திக்கும் கீதா மேத்தாவுக்கு வெளிநாட்டினருக்கான பிரிவில் பத்மஸ்ரீ விருது ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுப்படுகிறது.

Read More