Home> India
Advertisement

அசாமிய சமுதாயத்திற்கு "சிவப்பு கடிதமாக" அமையும் NRC பட்டியல்?

தேசிய குடிமக்களின் பதிவகம் (NRC) அசாமிய சமுதாயத்திற்கு ஒரு "சிவப்பு கடிதமாக" எடுத்துக்கொள்ள முடியாது என்று அசாம் அமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்!

அசாமிய சமுதாயத்திற்கு

தேசிய குடிமக்களின் பதிவகம் (NRC) அசாமிய சமுதாயத்திற்கு ஒரு "சிவப்பு கடிதமாக" எடுத்துக்கொள்ள முடியாது என்று அசாம் அமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்!

மேலும், முந்தைய பட்டியலில் "உண்மையான இந்தியர்கள்" பெயர்கள் இருந்ததால், NRC பட்டியலில் தனக்கு அதிக நம்பிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலை இன்று வடகிழக்கு மாநிலமான அசாமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த NRC பட்டியலில் 3.11 கோடி (3,11,21,004) பேர் இடம் பெற்றுள்ளதாக NRC-யின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்துள்ளார். மேலும் 19 லட்சம் (19,06,657) பேர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் விடுபட்ட மக்கள் சரியான சான்றுகளை வழங்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இறுதிப் பட்டியலின் கீழ் சுமார் 40 லட்சம் பேரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட இருந்தது. இந்த பட்டியலில் யாருடைய விடுபட்டுள்ளதோ வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறைடு செய்வதற்கான கால அவகாசத்தை 60 முதல் 120 நாட்களாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

NRC பட்டியல் வெளியான நிலையில் அசாமில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறமால் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசாமின் தலைநகர் குவஹாத்தி உட்பட மாநிலத்தின் பல முக்கிய பகுதிகளில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது தேசிய குடிமக்களின் பதிவகம் (NRC) அசாமிய சமுதாயத்திற்கு ஒரு "சிவப்பு கடிதமாக" எடுத்துக்கொள்ள முடியாது என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்மா செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில்., "வரைவுக்குப் பிறகு NRC-யின் தற்போதைய வடிவத்தில் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். பல உண்மையான இந்தியர்கள் வெளியே இருக்கும்போது, ​​இந்த ஆவணம் அசாமிய சமுதாயத்திற்கான ஒரு சிவப்பு கடிதம் என்று நீங்கள் எவ்வாறு கூற முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "தெற்கு சல்மாரா மற்றும் துப்ரி போன்ற வங்கதேசத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில், விலக்கு விகிதம் மிகக் குறைவு, பூமிபுத்ரா மாவட்டத்தில் இது மிக அதிகம். அது எப்படி இருக்க முடியும்? இந்த NRC மீது நாங்கள் இனி ஆர்வம் காட்டவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More