Home> India
Advertisement

வட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக 15 ரயில்கள் தாமதம்!

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலத்திருந்து புது டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும் 15 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடம் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.

டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது. தற்போது டெல்லி யில் பயங்கர குளிர் காலம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ரத்தத்தை உறைய வைப்பது போல உள்ளது. 

இந்நிலையில் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக புது டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும், 15 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

fallbacks

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More