Home> India
Advertisement

போலி ஆவண வழக்கில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீராங்கனை!

போலி ஆவணங்கள் சமர்பித்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி ஹர்மன்ப்ரீட் கரூர்-ன் துணை கண்காணிப்பாளர் பதவி பறிக்கப்பட்டது!

போலி ஆவண வழக்கில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீராங்கனை!

போலி ஆவணங்கள் சமர்பித்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி ஹர்மன்ப்ரீட் கரூர்-ன் துணை கண்காணிப்பாளர் பதவி பறிக்கப்பட்டது!

2017-ஆம் ஆண்டு மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத்தலைவி ஹர்மன்ப்ரீட் கரூருக்கு அவரது சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலம் அவருக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியினை வழங்கியது. கடந்த மார்ச் 1-ஆம் நாள் அவர் இப்பதவியிலும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது, இப்பதவிக்கு இவர் சமர்பித்த ஆவணங்களில் பட்டய படிப்பிற்கான சான்றிதழ் போலியானது என கூறி அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் மீது போலி ஆவணம் சமர்பித்தது தொடர்பாக வழக்கு எதும் தொடரப்படவில்லை.

இந்த பதவிக்காக இவர் தான் மீரட்-ல் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலை.,யில் இளங்கலை முடித்ததாக கரூர் சமர்பித்த ஆவணத்திலையே இந்த பிரச்சணை முளைத்துள்ளது.

இதனையடுத்து கரூரின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் அவருக்கு தற்போது காவலர் பதவியினை வழங்கவுள்ளதாவும் பஞ்சாப் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தன் மகளின் சான்றிதழ்கள் போலியானவை அல்ல எனவும், மேற்குறிப்பிட்ட அதே கல்லூரி சான்றிதழ் அடிப்படையிலையே அவருக்கு முன்னதாக மேற்கு ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் கரூரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Read More