Home> India
Advertisement

சார்தாம்சாலை திட்டம், எல்லை சாலை அமைப்பின் முத்தான பணி என அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு

ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை எண். 94), போக்குவரத்து அதிகம் இருக்கும்  சம்பா நகரத்தில், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள்  எல்லை சாலைகள் அமைப்பான பி.ஆர்.ஓவை பாராட்டினார்.  பணியில் ஈடுபட்ட அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டார்.

சார்தாம்சாலை திட்டம், எல்லை சாலை அமைப்பின் முத்தான பணி என அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு

புதுடெல்லி: ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை எண். 94), போக்குவரத்து அதிகம் இருக்கும்  சம்பா நகரத்தில், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள்  எல்லை சாலைகள் அமைப்பான பி.ஆர்.ஓவை பாராட்டினார்.  பணியில் ஈடுபட்ட அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டார்.

திரு. நிதின் கட்கரி அவர்கள்  பதிவிட்ட ட்விட்டர் செய்தியில், ''நமது எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) குழு, சார்தாம் சாலை திட்டத்தில் ஒரு மிக பெரியச் சாதனையை செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (என்.எச் 94) போக்குவரத்து மிக அதிகம் உள்ள சம்பா நகரில்,  440 மீட்டர்நீளமுள்ள சுரங்கப்பாதையை  தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

 

 

பி.ஆர்.ஓசெய்த பணி ஒரு அசாதாரணமான சாதனை என்று தனது மற்றொரு ட்வீட்டர் செய்தியில் குறிப்பிட்ட கட்கரி அவர்கள்,, "  உலகஅளவில் தொற்றுநோய் பரவி வரும் இந்த நெருக்கடி நிலையில், தேசத்தை மேம்படுத்த உதவும் இந்த அசாதாரணமான சாதனையை புரிந்ததற்காக பி.ஆர்.ஓ குழுவினரை வாழ்த்துகிறேன்" என்று பாராட்டினார்.

 இந்த சுரங்கப்பாதை,  போக்குவரத்தை எளிதாக்குவதோடு, சம்பா நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சார்தாம் யாத்திரை செல்பவர்களின் பயணத்தை எளிதாக்கவும் பொருளாதார மேம்பாட்டிற்கும் மிக முக்கிய பங்கு வகிக்கும்  என்று மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ரூ .88 கோடி செலவில், 6 கி.மீ சாலைமற்றும் 450 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

(மொழியாக்கம் - வித்யா கோபாலகிருஷ்ணன்)

Read More