Home> Health
Advertisement

நிபா வைரஸ் வெளவால்களால் பரவுவது அல்ல -போபால் ஆய்வகம்!

நிபா வைரஸ் வெளவால்களிடமிருந்தோ அல்லது வெளவால்கள் மூலமாகவோ பரவுவதல்ல என கால்நடை பராமரிப்பு துறை திடுக்கிடும் தகவல்! 

நிபா வைரஸ் வெளவால்களால் பரவுவது அல்ல -போபால் ஆய்வகம்!

நிபா வைரஸ் வெளவால்களிடமிருந்தோ அல்லது வெளவால்கள் மூலமாகவோ பரவுவதல்ல என கால்நடை பராமரிப்பு துறை திடுக்கிடும் தகவல்! 

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எவ்வாறு குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் கடுமையான மூளைகாய்ச்சலுக்கு ஆளாவார்கள். பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் கொடியது. இந்த நிபா வைரஸ் தாக்கி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, நேற்று தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

நிபா வைரஸ் ஒரு வகை வெளவாலால் பரவுகிறது என்று கூறப்பட்ட நிலையில், அதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த ஆய்வின் முடிவு இன்று கால்நடை பராமரிப்பு துறைக்கு வந்தது. இதையடுத்து, கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் என்.என். சசி கூறிய போது, நிபா வைரஸ் வெளவால்களால் பரவுவது அல்ல என்றும், இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

Read More