Home> India
Advertisement

அடுத்த இடி: உபி பள்ளிகளில் கிறிஸ்துமஸ்-க்கு தடை!

இத்தகைய நடவடிக்கைகள் இந்து மாணவர்களின் மனோபாவத்தை பாதிக்கக்கூடும்...

அடுத்த இடி: உபி பள்ளிகளில் கிறிஸ்துமஸ்-க்கு தடை!

லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் இந்து பெரும்பான்மை மாணவர்களுடன் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகளில், பள்ளி வளாகத்திற்குள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடு தடை விதிக்க வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

உத்திர பிரதேசத்தின் இந்து ஜகார்மண் மன்ச், அலிகார் நகரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகளில் இந்து மாணவர்கள் பெரும்பான்மையாக உள்ள பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடா கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து ஜகான் மன்சின் தலைவர் சோனு சவிதா கூறுகையில்,...

பண்டிகையின் போது மாணவர்களை பள்ளி நிர்வாகம் பொம்மைகள், பரிசுகள் கொண்டுவர வேண்டும் என கட்டாய படுத்துகின்றனர்.

ஒருவேலை அதை பின்பற்ற மருத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பள்ளி நிர்வாகங்கள் எச்சரிக்கை செய்கின்றனர். எனவே இத்தகைய நிகழ்வுகளை தடுக்கவே நாங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இத்தகைய நடவடிக்கைகள் இந்து மாணவர்களின் மனோபாவத்தை பாதிக்கக்கூடும் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More