Home> India
Advertisement

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... 55 நாடுகளுக்கு அழைப்பு!

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ மற்றும் மும்பாபிஷேக விழாவுக்கு, 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்... 55 நாடுகளுக்கு அழைப்பு!

அயோத்தி (உத்தரபிரதேசம்): அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ மற்றும் மும்பாபிஷேக விழாவுக்கு, 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும், உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானானந்த்,  ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

சுமார் 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், எம்.பி.க்கள் உட்பட 100 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்ட்டையை காணவுள்ளனர். பிரபு ஸ்ரீ ராம் வழிவந்தவர் என்று கூறிக்கொள்ளும் கொரிய ராணியையும் நாங்கள் அழைத்துள்ளோம் என்று சுவாமி விக்யானானந்த் ANI செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அழைக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டொமினிகா, காங்கோ ஜனநாயக குடியரசு (டிஆர்சி), எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கயானா, ஹாங்காங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, மலாவி, மொரீஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியரா லியோன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை , சுரினாம், ஸ்வீடன், தைவான், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் & டொபாகோ, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, யுகே, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா ஆகியவை அடங்கும். 

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அந்த அமைப்பின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விஎச்பி இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விக்யானந்த் தெரிவித்துள்ளார். மேலும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் அனைத்து விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20 ஆம் தேதி லக்னோவுக்கு வருவார்கள் என்றும் சுவாமி விக்யானானந்த் கூறினார். அதன்பிறகு, ஜனவரி 21-ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள்.

"மூடுபனி மற்றும் வானிலை காரணமாக, பிரதிநிதிகள் நிகழ்வுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார். மேலும் வெளிநாட்டு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக சுவாமி விக்யானானந்த் முன்பே கூறியிருந்தார். 

முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் பிரமாண்ட கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரை பிரத்திஷ்டை செய்ய முடிவு செய்துள்ளது. அயோத்தியில் ராம் லல்லாவின் பிராண-பிரதிஷ்டை விழாவிற்கான வேத சடங்குகள் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும். 

மேலும் படிக்க | 1000 ஆண்டுகள் தாங்கும்... ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து பாறைகள் - எதற்கு தெரியுமா?

கோயிலின் கருவறைக்குள் சம்பிரதாயப்படி ஸ்ரீ ராம் லல்லா என்னும் குழந்தை ராமரை பிராண பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முன்னதாக, வெள்ளிக்கிழமை, பிரதமர் மோடி அயோத்தியின் ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு விரத அனுஷ்டானங்களை கடைபிடிப்பதாக அறிவித்தார். 

அயோத்தி நகரில், கோவில், கோவில் வளாகம் மட்டுமின்றி, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஏற்ற வகையில் நகரம் முழுவதையும் தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களும் அயோத்தியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கோவில் கட்டுமானத்திற்காக, பக்தர்கள் தினமும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.4500 முதல் 5000 கோடி வரை நன்கொடை கிடைத்துள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட பணம் வங்கிகளில் வைப்புத்தொகையாக ஆக வைக்கப்படும். அவை, குறிப்பிட்ட செலவுகளுக்காக தனித்தனியாக சேமிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More