Home> India
Advertisement

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் சிவசேனாவுக்கு ஆதரவு என NCP அறிவிப்பு

மோடி (Modi Govt) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என என்.சி.பி கூறியுள்ளதாகத் தகவல்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் சிவசேனாவுக்கு ஆதரவு என NCP அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் (Maharashtra Assembly Elections 2019) அரசியல் நிலைமை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது. நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) சிவசேனாவின் 50-50 பார்முலாவை ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது இந்த பார்முலா அடிப்படையில், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனா (Shiv Sena) கட்சிக்கு முதலமைச்சர் பதவியும், அடுத்து இரண்டரை ஆண்டுகள் என்சிபி-க்கு முதல்வர் பதவி என்ற கோரிக்கையுடன் என்.சி.பி முன்மொழிந்துள்ளது.

இது தவிர, உள்துறை அமைச்சகம், வருவாய், நிதி போன்ற துறைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் சமமான அளவில் பகிர்ந்துக் கொண்டு சிவசேனாவுடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டு உள்ளது. ஆதாரங்களின்படி, இந்த திட்டத்தின் கீழ், என்.சி.பி. முக்கியமான நிபந்தனை என்னவென்றால், மோடி (Modi Govt) தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந் (Aarvind Sawant) மந்திரி பதவியை ராஜினாமா செய்து வேண்டும், அதேவேளையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்து வெளியேற வேண்டும் என என்.சி.பி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கைகளை குறித்து வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் சிவசேனா முடிவெடுக்க உள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாங்கத்தை மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சியை பாஜக முன்வைக்காது என நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா பாஜக தலைமயிலான கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பாஜக (Bharatiya Janata Party) தரப்பில் இருந்து, சிவசேனா ஆதரவு குறித்து சரியான முடிவு வரதா வரை பாஜக தலைமையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடாது என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறது.

அதாவது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 288 இடங்களில் 162 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதேவேளையில் காங்கிரஸ் (NCP-Congress alliance) தலைமையிலான கூட்டணி 104 இடங்களை பெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிகாரப்பகிர்வு காரணமாக, இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

Read More