Home> India
Advertisement

Delhi Chalo: கருப்பு தினத்தை அனுசரிக்கும் விவசாயிகள்! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என எச்சரிக்கை!

Farmers Observe ’Black Firday' On February 23, 2024 : டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது...

Delhi Chalo: கருப்பு தினத்தை அனுசரிக்கும் விவசாயிகள்! தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என எச்சரிக்கை!

புதுடெல்லி: இந்தியாவில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில், இன்று கருப்பு வெள்ளி என்று சோக தினமாக அனுசரிக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாத் அறிவித்ததை அடுத்து, தலைநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

"பஞ்சாபில் உள்ள கானௌரி எல்லைக் கடவையில் விவசாயி ஒருவர் இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை 'கருப்பு வெள்ளி' அனுசரிக்கப்படும். நேற்றும் டிராக்டர் அணிவகுப்பு நடத்தினோம்," என்று ராகேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதி டிராக்டர் அணிவகுப்பு நடத்த உள்ளதாக பிகேயு தலைவர் கூறினார்.

சேதங்களை ஈடுகட்ட தயாராகுங்கள்

இதற்கிடையில், பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவை ஈடுகட்ட போராட்டக்காரர்கள் தயாராக வேண்டும் என அம்பாலா காவல்துறை எச்சரித்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் வங்கிக் கணக்குகளைப் பறிமுதல் செய்வதன் மூலமும், அவர்களின் உடமைகளை இணைப்பதன் மூலமும் சேதங்கள் ஈடுசெய்யப்படும் என்று அம்பாலா மாவட்டத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க | வேலையை விடாதீங்க... சம்பள உயர்வு 300%... இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

அம்பாலா காவல்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு

அம்பாலா காவல்துறை அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையை வெளியிட்டது, பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் விவசாயிகள் அமைப்புகள் சம்பு எல்லையில் போடப்பட்ட தடுப்புகளை உடைக்க தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் தினமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் காவல்துறை மீது கற்களை வீசி தாக்கி வருவதாகவும் கூறியது. இது தொடர்பான எச்சரிக்கையையும் எக்ஸ் வலைதளப் பக்கத்திலும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்று கூறும் இந்தப் பதிவில்,அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து இழப்பீடு வழங்கப்படும் என்று நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் விதிகளின்படி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் 1984 (PDPP சட்டம்), போராட்டங்கள் நடத்தும்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அந்த போராட்டத்தை நடத்தும் அமைப்பின் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Farmers Protest: பாரிஸை சுற்றி வளைத்துள்ள விவசாயிகள்... பிரான்ஸில் வலுக்கும் போராட்டம்!

சேதம் தொடர்பான தகவல்

ஏதேனும் ஒரு சமூகத்தினரின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், சேத விவரத்தை நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளான, போராட்டக்காரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தல் மற்றும் போராட்டக்காரர்களின் வங்கி கணக்குகளை பறிமுதல் செய்தல் ஆகிய நடவ தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தலைவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தையும் (National Security Act) போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்கு மத்தியில், அபுதாபியில் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், 2024 பிப்ரவரி 26ஆம் தேதியை WTO வெளியேறும் நாளாகக் கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha (SKM)) அழைப்பு விடுத்துள்ளது.

பிப்ரவரி 26ம் தேதியன்று, அதாவது அடுத்த வாரம் திங்களன்று, டிராக்டர்கள் மூலம் டெல்லி செல்லும் வழியை நோக்கி செல்வோம். அது ஒரு நாள் நிகழ்ச்சியாக இருக்கும், பின்னர் நாங்கள் திரும்புவோம். இந்தியா முழுவதும், எங்கள் கூட்டங்கள் நடக்கும். மார்ச் 14ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம். அந்த நிகழ்ச்சிக்கு டிராக்டர் இல்லாமல் மக்கள் செல்வார்கள்.அரசு எங்களை தடுக்கவில்லை என தொடர்ந்து கூறுகிறது. பொறுத்திருந்து தான் பார்கக்வேண்டும் என விவசாய போராட்டக்குழுத் தலைவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | வன்முறையில் ஈடுபட்டால் NSA பாயும்: விவசாயிகளுக்கு ஹரியாணா காவல்துறை எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More