Home> India
Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பிரதமர் மோடி அழைப்பு

வரவிருக்கும் 2019 லோக்சபா தேர்தலில் ஒரு வலுவான ஜனநாயகம் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை கண்டிப்பாக அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். வரவிருக்கும் 2019 லோக்சபா தேர்தலில் ஒரு வலுவான ஜனநாயகம் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் என எதிர்கட்சிகளுக்கும், தனது கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் பிரபலமாக உள்ள அனைவரும் தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமையை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். வாக்கு எண்ணிக்கையை அதிக்கரிக்க அனைத்து தரப்பினரும் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

 

குறிப்பாக இளைஞர்களுக்கு மற்றும் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு வாக்கு என்ற அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று தனது வலைப்பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

"வலுவான ஜனநாயகத்திற்கான நான்கு கோரிக்கைகள்" என்ற தலைப்பில் அவரது வலைப்பதிவில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

 

Read More