Home> India
Advertisement

பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் வலுவாகவும் திறமையாகவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு தாண்டி பாகிஸ்தான் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) வீரமரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் வலுவாகவும் திறமையாகவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கூர்க்கா ரைபிஸ் படைப்பிரிவை சேர்ந்த 34 வயதான ராணுவ வீரர் நாயக் ரஜிப் தாபா வீர மரணம் அடைந்தார்.

பாகிஸ்தான் இராணுவம் இன்று "ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி நடத்திய துப்பாக்கி சூட்டில், நாயக் ராஜீப் தாபா உயிரிழந்தார்" என்று லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவித்திருந்தார். 

மேலும் "அவர் ஒரு துணிச்சலான, அதிக தேசப்பற்று கொண்ட நேர்மையான சிப்பாய். அவரின் மிக உயர்ந்த தியாகம் மற்றும் கடமைக்காக தேசம் எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கும்” என்றும் தேவேந்தர் ஆனந்த் கூறியுள்ளார்.

வீரமரணம் அடைந்த ரஜிப் தாபா மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மெச்ச்பாரா கிராமத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் குஸ்பு மங்கர் தாபா.

Read More