Home> India
Advertisement

கையில் துப்பாக்கியுடன் விருந்தினர்களை வரவேற்கும் மணமக்கள்...

கடந்த சனிக்கிழமையன்று நாகாலாந்தின் திமாபூரில் ஒரு திருமண வரவேற்பறையில் பங்கேற்க சென்ற விருந்தினர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காரணம் மணமக்கள் இருவரும் தானியங்கி துப்பாக்கிகளுடன் விருந்திரனர்களை வரவேற்றது தான்.

கையில் துப்பாக்கியுடன் விருந்தினர்களை வரவேற்கும் மணமக்கள்...

கடந்த சனிக்கிழமையன்று நாகாலாந்தின் திமாபூரில் ஒரு திருமண வரவேற்பறையில் பங்கேற்க சென்ற விருந்தினர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காரணம் மணமக்கள் இருவரும் தானியங்கி துப்பாக்கிகளுடன் விருந்திரனர்களை வரவேற்றது தான்.

சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட இந்த புகைப்படங்கள், நாகாலாந்து-ஒருங்கிணைப்பு தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலின் (NSCN-U) 'கிலோ கிலோன்சர்' (உள்துறை அமைச்சர்) போஹோட்டோ கிபாவின் மகன் மற்றும் மருமகளுக்கு சொந்தமானவை. 

(NSCN-U) - (நாகா கிளர்ச்சி மையத்துடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைப்பு)

கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி திருமண வரவேற்பு நாகாலாந்தின் வணிக மையமான திமாபூரில் நடந்தது, மணமகனும் மணமகளும் தாக்குதல் துப்பாக்கிகள்-AK56 மற்றும் M-16 ரக துப்பாக்கிகளை கையில் ஏந்தி காட்சிப்படுத்திய போது, வரவேற்புக்கு வந்நிருந்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர், எனினும் மணமக்கள் கேமராக்களுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பெயர்களைக் குறிப்பிடுவதற்கு ஊடகங்கள் பயன்படுத்திய “சுய பாணி” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியதற்காக பத்திரிகையாளர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதற்காக (NSCN-U) தலைவர் கிபா முன்னதாகவே ஒரு குற்றச்சாட்டில் குறிபிடப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பொது மக்களுக்கு மத்தியில் ஆயுதங்கள் ஏந்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

NSCN-U என்பது NSCN-Isak Muivah இன் பிரிந்த பிரிவாகும், இது நாகா கிளர்ச்சி அமைப்புகளில் மிகப்பெரிய மற்றும் பழமையான அமைப்பாகும்.

இது ஏழு கிளர்ச்சிப் பிரிவுகளில் (NSCN-U தவிர), நாகா தேசிய அரசியல் குழுக்களின் (NNPG) பதாகையின் கீழ் மையத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More