Home> India
Advertisement

காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது சத்பாலின் படுகொலை..!!!

1990, 2003, இப்போது 31 டிசம்பர் 2020 மாலையில் சத்பால் நிஷால் சர்மா படுகொலை ... என தொடருகிறது, பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் காஷ்மீர் நகை க்டை வியாபாரி, சதபாலின் படுகொலை மீண்டும் நாதிமார்க்கில் 1990 ஆம் ஆண்டு நடந்த படுகொலைகளை நினைவுபடுத்துகிறது. இறந்தவரின் உறவினர்களின் கதறலை கேட்க இயலவில்லை. அழுகிற குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரே கேள்வி, நாங்கள் செய்த தவறு என்ன என்பது தான்.

அவர் செய்த ஒரே தவறு குடியேற்ற சான்றிதழ் வாங்கியது தான். ஜம்மு காஷ்மீரில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து, ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் சிறிது நாட்களுக்கு முன், குடியேற்ற சான்றிதழ் வாங்குவோர் கொல்லப்படுவார்கள் என பகிரங்கமாகவே அறிவித்திருந்தனர்.

காஷ்மீரில் (Kashmir) 1989-90ல் பயங்கரவாதம் உச்சத்தை எட்டிய போது காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரிலிருந்து தப்பிச் சென்றனர். ஆயினும்கூட, காஷ்மீர் பண்டிதர்களின் பத்து குடும்பங்கள் நாடிமார்க்கில் தங்கியிருந்தன. அந்த பயங்கரமான இரவவில், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கிராமத்திற்குள் நுழைந்தனர். இதன் பின்னர், பயங்கரவாதிகள் கிராமத்தின் காஷ்மீர் பண்டிதர்களை வரிசையாக நிற்க வைத்து துபாக்கியினால் சரமாரியாக சுட்டனர். எல்லா இடங்களிலும் அலறல்கள் கேட்டன. சிறிது நேரம் கழித்து, எல்லா இடங்களிலும் சடலங்கள் இருந்தன. ஒரு மயான அமைதி நிலவியது. கிராமம் முழுவதும் ஒரு தகனம் ஆனது.

அதே நேரத்தில், 1990 ஆம் ஆண்டில், பயங்கரவாதிகள், காஷ்மீர் பண்டிதர்களை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து பொது இடத்தில் சுட்டனர். ஆண்களின் கண்ணின் முன், அவரது மனைவிகள், மகள்கள் கற்பழிக்கபட்டு கொல்லப்பட்டனர். அதோடு நிற்கவில்லை அந்த பயங்கரவாதிகள் ஒரு அப்பாவி பெண்ணின் மகனை கொன்று, மகனின் ரத்தத்தை தாயை சாப்பிட வைத்தனர்.  ஜனவரி 19, 1990 அன்று, ஸ்ரீநகரில் மில்லியன் கணக்கான மக்களின் ஊர்வலம் எடுக்கப்பட்டது. கோஷங்கள் - எங்களுக்கு என்ன சுதந்திரம் வேண்டும், காஷ்மீர் பண்டிதர்கள் ஓடிவிடுகிறார்கள், பெண்களை விட்டு விடுங்கள்.

கடந்த 2003 மார்ச் 23,அன்று, பகலில் கிராமத்தில் பயங்கரவாதிகள் வந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வரவேயில்லை. பயங்கரவாதிகள் தடையினறி படுகொலை நடத்தினர்.

 இப்போது, 2020 டிசமர் 31ம் தேதி, நகை கடை வியாபாரியை கொலை செய்து 1990 ஆம் ஆண்டை நினைவுபடுத்தியுள்ளனர்.

ALSO READ |2020 ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் இனிமேல் தான் என்கிறார் Nostradamus..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More