Home> India
Advertisement

மருத்துவம்,போக்குவரத்து,பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு : மத்திய அரசு அனுமதி

மருத்துவம்,போக்குவரத்து,பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு : மத்திய அரசு அனுமதி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை மறு ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிஆயோக், நிதித்துறை, வர்த்தக துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் ஒலிபரப்பு துறையிலும் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறை, விமான போக்குவரத்துத்துறை, பாதுகாப்பு துறை, கால்நடை துறை, இ-காமர்ஸ், உணவு உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலும் 100% அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் திறந்த பொருளாதாரக் கொள்கை கொண்ட நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெறும் என மத்திய வர்த்தக அமைச்சக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் இன்க் நிறுவனமானது இந்தியாவில் முதலீடு செய்ய உள்நாட்டிலிருந்து 30% வேலையாட்களை நியமனம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையில் இருந்து விலக்கு கோரியிருந்தது. இந்நிலையில்  மத்திய அரசு இந்த கெடுபிடியை 3 ஆண்டுகளுக்கு தளர்த்துவதாக முடிவு செய்துள்ளது.

இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் கூறியிருக்கும் நிலையில் இந்திய பொருளாதாரத்தின் மீது நேர்மறை பார்வையை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய அறிவிப்பை மத்திய அரசு முன்வைத்துள்ளதா என ரமேஷ் அபிஷேக்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிஷேக், "நிச்சயமாக இல்லை. இது ஒரு நல்ல நாள். அதனால் இந்த அறிவிப்பை வெளியிட்டோம் என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், விவசாயிகள் பிரச்னை மற்றும் வங்கி தொடர்பான பிரச்னைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக்கூறியுள்ளது.

 

 

Read More