Home> India
Advertisement

கரும்பு விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! மோடி அரசு எத்தனால் விலையை உயர்த்தியது

எத்தனால் விலையை 30 பைசா முதல் 2 ரூபாய் வரை மத்திய அரசாங்கம் உயர்த்தியுள்ளது. புதிய எத்தனால் விலை டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! மோடி அரசு எத்தனால் விலையை உயர்த்தியது

புதுடெல்லி: பெட்ரோலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் எத்தனால் விலை அதிகரித்துள்ளது. எத்தனால் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எத்தனால் விலையை 30 பைசா முதல் 2 ரூபாய் வரை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் கரும்பு விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள். நாட்டில் இரண்டு வகையான எத்தனால் தயாரிக்கப்படுகிறது. 

சி-ஹெவி மோலாஸுடன் கூடிய எத்தனால் விலை லிட்டருக்கு ரூ.43,46 இருந்து லிட்டருக்கு ரூ.43,75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பி-ஹெவி மோலேஸின் விலை லிட்டருக்கு ரூ.52,43 இருந்து ரூ.54,27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பு சாறு, சர்க்கரை மற்றும் சர்க்கரை பாகில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் விலை லிட்டருக்கு ரூ.59.48 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 

புதிய எத்தனால் விலை டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும். கரும்பு அல்லது சோளப் பயிரிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டின் பல சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனால் விலையை அதிகரிப்பதன் மூலம் சர்க்கரை ஆலைகளுக்கு வருமானம் கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்கும்.

எத்தனால் ஒரு பெரிய தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இராக்கெட்டு எரிபொருளாகவும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இலகுரக இராக்கெட் இயக்க பந்தய விமானங்களில் தற்போது எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. 

ஆக்ஸிஜனின் அளவு அதிகமாக உள்ளதால், எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கார்பன் ஓராக்சைடு, நைட்ரசன் ஆக்சைடுகள், மற்றும் ஓசோன் மாசுக்கள் உருவாதல் தீங்குகள் குறைவதாக தொழிர்சாலைகள் ஆலோசனைக் குழு ஒன்று தெரிவிக்கிறது. 

அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், பெட்ரோல் போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். பல நாடுகளில் எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனாலையும் கலந்து விற்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசாங்கம் விதித்த 18 சதவீத ஜிஎஸ்டியை, தற்போது 12 சதவீதமாகக் குறைத்தது. அடுத்த ஆண்டுக்குள், அதாவது 2020 ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. தற்போது அது சுமார் 3 சதவீதமாக இருக்கிறது.

Read More