Home> India
Advertisement

சாத்வி பிரக்யா ட்விட்டர் அங்கீகாரம், ட்விட்டர் நிறுவனத்தை சாடிய மெஹபூபா!

குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சாத்வி பிரக்யாவின் ட்விட்டர் கணக்குக்கு அங்கீகாரம் கொடுத்த ட்விட்டர் இந்தியா நிறுவனத்தை மெஹபூபா முப்தி சாடல்!!

சாத்வி பிரக்யா ட்விட்டர் அங்கீகாரம், ட்விட்டர் நிறுவனத்தை சாடிய மெஹபூபா!

குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சாத்வி பிரக்யாவின் ட்விட்டர் கணக்குக்கு அங்கீகாரம் கொடுத்த ட்விட்டர் இந்தியா நிறுவனத்தை மெஹபூபா முப்தி சாடல்!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்க்கு எதிராக போட்டியிடுகிறார். 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்திருக்கும் சாத்வி பிரக்யா, தற்போது போபால் மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் சாத்வி பிரக்யாவின் ட்விட்டர் கணக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா, தனது ட்விட்டர் பதிவில், வெறுப்பை விதைப்பதற்காக தீவிரவாத தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தளம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டர் இந்தியாவை சாடியுள்ளார். நல்ல வேளை, கோட்சே தற்போது உயிருடன் இல்லை என்றும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார். 

 

Read More