Home> India
Advertisement

இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் மனோகர் லால்!

ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டர் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் மனோகர் லால்!

ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டர் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

ஹரியானாவில் பாஜக-JJP கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் இரண்டாவது முறையாக ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டர் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.  கட்டருடன், துணை முதல்வரும் பதவியேற்பார். இருப்பினும், கட்டாரின் துணை முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளையில் அமைச்சரவை அமைப்பது தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவில் அரசாங்கத்தை அமைப்பதற்காக துஷ்யந்த் சௌதாலாவின் ஜன்னாயக் ஜான்ஷக்தி கட்சி உடன் பாஜக ஒப்பந்தம் செய்துள்ளது. பாஜக மற்றும் JJP தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தின் பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை இந்த கூட்டணி குறித்த முடிவை அறிவித்தார். ஹரியானாவின் புதிய துணை முதல்வராக துஷ்யந்த் இருப்பார் என்று தெரிகிறது. இருப்பினும், சனிக்கிழமையன்று, அவரது தாயும், JJP தலைவருமான நைனா சிங் சௌதாலாவின் பெயர் துணை முதல்வராக கிசுகிசுக்கப்பட்டது. 

அண்மையில் முடிவடைந்த ஹரியானா வாக்கெடுப்பில் பத்ரா சட்டமன்றத் தொகுதியில் JJP வேட்பாளர் நைனா, காங்கிரஸின் ரன்பீர் சிங் மகேந்திராவை 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ஹரியானாவில் 10 தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் துஷ்யந்த் மாநிலத்தில் கிங்மேக்கராக உருவெடுத்தார்.

முன்னதாக இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா தெரிவிக்கையில்., "ஹரியானா மக்களின் ஆணையை ஏற்றுக்கொண்டு, இரு கட்சிகளின் தலைவர்களும் (பாஜக - JJP) ஹரியானாவில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என்று முடிவு செய்துள்ளனர். முதல்வர் பாஜகவிலிருந்து வருவார், துணை முதல்வர் ஜேஜேபியிலிருந்து வருவார்," என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பிற்பாதில் பாஜக- JJP தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஹரியானாவில் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More