Home> India
Advertisement

விநோத வழக்கு: 40 பைசா விவகாரத்திற்கு ₹4000 அபராதம் கட்டிய நபர்!

பெங்களூரு உணவகம் 40 பைசா அதிக பணம் வசூலித்ததாக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக புகார்தாரரை கண்டித்ததோடு,  இழப்பீடாக ரூ.4,000 வழங்கவும் உத்தரவிட்டனர்.

விநோத வழக்கு: 40 பைசா விவகாரத்திற்கு ₹4000 அபராதம் கட்டிய  நபர்!

பெங்களூரு உணவகம் 40 பைசா அதிக பணம் வசூலித்ததாக  வாடிக்கையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், அரசு விதிகளின்படி 50 பைசாவுக்கு மேலான தொகையை முழு ரூபாயாக மாற்றலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, விளம்பரத்திற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக புகார்தாரரை கண்டித்த நீதிபதிகள், உணவகத்தின் நிர்வாக இயக்குநருக்கு இழப்பீடாக ரூ.4,000 வழங்கவும் உத்தரவிட்டனர்.

வாடிக்கையாளர் 40 பைசா விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகினார்

21 மே 2021 அன்று, சென்ட்ரல் ஸ்ட்ரீட்டில் உள்ள ஹோட்டல் எம்பயருக்கு மூர்த்தி என்ற மூத்த குடிமகன் சென்று உணவு ஆர்டர் செய்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது பில்லின் மொத்தத் தொகை ரூ.264.60 ஆக இருந்த நிலையில், ஊழியர்கள் அவருக்கு ரூ.265 என்ற அளவிற்கு பில் கொடுத்தனர். அப்போதுதான் மூர்த்தி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த நிலையில், சாதகமான பதில் கிடைக்காததால், வாடிக்கையாளர்களை கொள்ளையடிப்பதாக பெங்களூரு நுகர்வோர் மன்றத்தை அணுகினார். மூர்த்தி, சேவையில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூபாய் 1 கேட்டதாகவும், இந்த சம்பவம் தனக்கு மன அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

ஹோட்டல் வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதம்

ஜூன் 26, 2021 அன்று தொடங்கிய விசாரணையில் மூர்த்தி தனது வாதத்தை முன் வைத்தார். அதே சமயம் வழக்கறிஞர்கள் அன்ஷுமன் எம் மற்றும் ஆதித்யா ஆம்ப்ரோஸ் ஆகியோர் உணவகம் தரப்பில் ஆஜரானார்கள். மூர்த்தியின் புகார் அற்பமானது என்பதோடு, மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இரு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.  மேலும் உணவிற்கான கட்டணத்தை முழு ரூபாயாக மாற்றவில்லை என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரித் தொகையே முழு ரூபாயாக மாற்றியதாகவும்  அவர்கள் வாதிட்டனர். 

எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த நீதிமன்ற நடவடிக்கைகள்

நீதிமன்ற நடவடிக்கைகள் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தன. தனிப்பட்ட விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி, நீதிமன்றம், எதிர் தரப்பினர் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்த விவகாரத்தில் புகார்தாரருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்று நீதிமன்றம் கூறியது. மார்ச் 4, 2022 அன்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 30 நாட்களுக்குள், எதிர் தரப்பினருக்கு இழப்பீடாக ரூ.2,000 மற்றும் நீதிமன்றச் செலவாக ரூ.2,000 செலுத்த வேண்டும் என்று புகார்தாரருக்கு உத்தரவிட்டது.

மேலும் படிக்க | ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு... பெங்களூருவில் கூட்டம் கூட தடை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More