Home> India
Advertisement

டீயில் ஜீனி குறைவாக போட்ட கர்ப்பிணி மனைவியை போட்டுதள்ளிய கணவர்..!

குறைந்த சர்க்கரையுடன் தேநீர் பரிமாறிய கர்ப்பிணி மனைவியை கணவர் கொடூரமாக கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம் உபி-யில் நடந்துள்ளது..! 

டீயில் ஜீனி குறைவாக போட்ட கர்ப்பிணி மனைவியை போட்டுதள்ளிய கணவர்..!

குறைந்த சர்க்கரையுடன் தேநீர் பரிமாறிய கர்ப்பிணி மனைவியை கணவர் கொடூரமாக கொலைசெய்த அதிர்ச்சி சம்பவம் உபி-யில் நடந்துள்ளது..! 

உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், லக்கிம்பூர் மாவட்டத்தின் பார்பர் பகுதியில் ஒரு கப் தேநீர் குடித்ததைத் தொடர்ந்து 40 வயது நபர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்தார்.

திங்களன்று பாப்லூ குமார் என்ற நபர் தனது மனைவி வழங்கிய தேநீரில் சர்க்கரை குறைவாக இருந்ததால் தனது தெளிவான மனநிலையை (பொறுமை இழத்தல்) இழந்துள்ளார். இதையடுத்து, கோபமடைந்த அவர் தனது மனைவி ரேணுவை (35) அடித்து, அவரது தொண்டையை கத்தியால் அறுத்துள்ளார். 

READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!

தம்பதியரின் மூன்று குழந்தைகளும் தங்கள் தாய் கூச்சலிடுவதைக் கேட்டு எழுந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சமையலறைக்குள் சென்று பார்க்கும் போது அவர்களின் தாயார் இரத்தக் வெள்ளத்தில் படுத்துக் கிடப்பதைக் கண்டார்கள், அவர் மூச்சு விட திணறினர்.  

பாப்லூ சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ரேணுவை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ரேணுவின் தந்தை பத்ரி பிரசாத்தின் புகாரின் பேரில் பாப்லூவுக்கு எதிராக ஐபிசி பிரிவு 302 (கொலை) இன் கீழ் FIR பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.  

Read More