Home> India
Advertisement

மம்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவடைந்தது 7 நாள் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

மம்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவடைந்தது 7 நாள் டாக்டர்கள் வேலைநிறுத்தம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவாரத்தைக்கு பிறகு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று அனைத்து அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவர்களுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவாரத்தைக்கு பிறகு, கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வாக்குறுதிகள் அளித்துள்ளார். மம்தா வாக்குறுதி அளித்ததில், தங்களுக்கு திருப்தி ஏற்ப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

முன்னதாக, கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது சயீத் என்ற நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நோயாளி இறந்ததுக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கூறி, ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வந்த 2 பயிற்சி மருத்துவர்களை கொடூரமாக தாக்கினர். இதனையடுத்து உறவினர்களின் தாக்குதலை கண்டித்து பயிற்ச்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்கள் களம் இறங்கினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பல பகுதிகளில் எதிரொலித்தது. 

Read More