Home> India
Advertisement

3 மாநில சட்டசபை மற்றும் முதல் கட்ட மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

வரும் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

3 மாநில சட்டசபை மற்றும் முதல் கட்ட மக்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

17வது மக்களவையை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் இடங்கள்: 

பீகார் - 4 
அசாம் - 5
ஒடிசா - 4 
சிக்கிம் - 1
திரிபுரா - 1
காஷ்மீர் - 2 
ஆந்திரா - 25
மணிப்பூர் - 1
மிசோராம் - 1
சட்டீஸ்கர் - 1 
மேகாலயா - 2 
நாகாலாந்து - 1
மகாராஷ்ட்ரா - 7
தெலங்கானா - 17
மேற்கு வங்கம் - 2
உத்தரபிரதேசம் - 5
அருணாச்சல் பிரதேசம்- 2 

முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கும், மூன்று மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க உள்ளது. அதற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். மார்ச் 25 ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். 

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்: மார்ச் 18

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 25

வேட்புமனு மறுபரிசீலனை செய்யும் நாள்: மார்ச் 26

வேட்புமனுத் திரும்ப பெரும் நாள்: மார்ச் 28

Read More