Home> India
Advertisement

ராகுல் காந்தியை பாராட்டிய சத்ருகான் சின்ஹா!! காங்கிரஸில் இணைகிறாரா?

பா.ஜ.கவின் மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் சேரலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ராகுல் காந்தியை பாராட்டிய சத்ருகான் சின்ஹா!! காங்கிரஸில் இணைகிறாரா?

நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு மீது தொடர்ந்து கூர்மையான விமர்சனங்கள் வைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஷத்ருகான் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் வரும் வியாழக்கிழமை இணைய உள்ளார் எனக் கூறப்படுகிறது. தற்போது இவர் பட்னா சாஹிப் என்ற தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். ஆனால் இந்தமுறை அவருக்கு பாஜக தரப்பில் சீட் ஒதுக்கவில்லை. பட்னா சாஹிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

தனக்கு சீட் ஒதுக்காததால் சத்ருகன் சின்ஹாவுக்கு பெரும் அதிருப்தியில் உள்ளார். இதனால் காங்கிரஸில் அவர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் மார்ச் 28 ஆம் தேதி ராகுல்காந்தி பட்னாவுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள செல்ல இருக்கிறார். அப்பொழுது அவர் காங்கிரஸில் சேரலாம் எனத் தெரிகிறது. இது பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து பாராட்டியுள்ளார் சத்ருகன் சின்ஹா. 

20 சதவீதம் ஏழை மக்களுக்கு மாத வருமானம் ரூ.12 ஆயிரம் கிடைக்க வகை செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சத்ருகன் சின்ஹா, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உத்தரவாதம் திட்டம் ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று சின்ஹா ​​கூறினார். 

ராகுல்காந்தி அறிவித்த திட்டத்தை, இவ்வளவு சீக்கிரம் பாஜக எதிர்க்க என்ன காரணம்? இன்னும் திட்டம் செயல்படுத்தவே இல்லை, ஆனால் அந்த திட்டத்தின் மீது கேள்விகள் ஏன் பாஜக எழுப்புகிறது என்றும் சின்ஹா கூறினார்.

Read More