Home> India
Advertisement

ஏன் பல மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை? சசி தரூர் கேள்வி

ஏன் மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை? என மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏன் பல மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை? சசி தரூர் கேள்வி

புது தில்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், இன்று(வெள்ளிக்கிழமை) தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களவை தேர்தல் குறித்து மோடி அரசாங்கம் மீது விமர்சனங்களை வைத்துள்ளார். 

அவர், 2019 மக்களவை தேர்தலில் பல மத்திய அமைச்சர்கள் போட்டியிடாதது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். பல மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாக தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள்? நிருவா யாதவ், சன்னி தியோல், பிரதான் தாகூர் எனக் கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரி, நிதி மந்திரி, பாதுகாப்பு மந்திரி, ரயில்வே அமைச்சர், பெட்ரோலியம் மந்திரி, கல்வி அமைச்சர், நிலக்கரி அமைச்சர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட வில்லை. மக்களவை சபாநாயகர் கூட தேர்தலில் போட்டியிடவில்லை. யார் தேர்தலில் போடுகிறார்கள்? நிர்ஹூ யாதவ், சன்னி தியோல், பிரியா தாகூர்! எனப் பதிவிட்டுள்ளார்.

அதாவது நாட்டின் அமைச்சர்களாக இருந்தவர்கள பலபேர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்களுக்கு பதிலாக சினிமா துறையைச் சேர்த்தவர்கள் 2019 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர் எனக் கூறியுள்ளார். 

எம்.பி. சசி தரூர் மீது அவரது மனைவி சுனந்தா மர்ம மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு செல்வதற்கு டெல்லி சிறப்பு நிதிமன்றம் தடை விதித்திருந்தது. தடைய நீக்குமாறு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சசி தரூர் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Read More