Home> India
Advertisement

மகாராஷ்டிராவில் கூட்டணி உறுதி: மக்களவை தேர்தலில் பாஜக 25, சிவசேனா 23 தொகுதியில் போட்டி

வரும் 2019 மக்களவை தேர்தலிலும் பிஜேபி மற்றும் சிவசேனா கூட்டணி தொடரும் என அறிவிப்பு

மகாராஷ்டிராவில் கூட்டணி உறுதி: மக்களவை தேர்தலில் பாஜக 25, சிவசேனா 23 தொகுதியில் போட்டி

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிஜேபியுடன் சேர்ந்து சிவசேனா கட்சி போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்ததால் சிவசேனா மற்றும் பாஜக இடையே பெரும் விரிசல் ஏற்ப்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதனையடுத்து இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிக்கு பிறகு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகின. மேலும் வரும் 2019 மக்களவை தேர்தலிலும் பிஜேபி மற்றும் சிவசேனா கூட்டணி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ளன. அதில் வரும் மக்களவை தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடும் எனக் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பாஜக - சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதியில் வெற்றி பெற்றது. அதில் பாஜக 22 இடங்களிலும், சிவசேனா 19 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More