Home> India
Advertisement

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தம்பி காலமானார்!

லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் தம்பியுமான ராமச்சந்திர பாஸ்வான் இன்று டெல்லியில் காலமானார். 

56-வயது ஆகும் ராமச்சந்திர பாஸ்வான் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

நான்கு முறை எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமச்சந்திர பாஸ்வான், லோக் ஜனசக்தி கட்சியின் சார்பாக சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பிஹாரின் சம்ஸ்திப்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரான ராமச்சந்திர பாஸ்வான் ஒரு வார காலமாக உடல்நலம் குன்றி டெல்லியில் உள்ள ராம் மனோகர்லோகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த எம்பிக்கு சுனைனா குமாரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். 

Read More