Home> India
Advertisement

ஆனந்த் அம்பானிக்கு வந்த விலை உயர்ந்த திருமண பரிசுகள்! அம்மாடி..இவ்ளோ பெரிய லிஸ்டா!

Anant Ambani Radhika Merchant Expensive Wedding Gifts : இந்தியாவின் பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில், விலை உயர்ந்த பல பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.   

ஆனந்த் அம்பானிக்கு வந்த விலை உயர்ந்த திருமண பரிசுகள்! அம்மாடி..இவ்ளோ பெரிய லிஸ்டா!

Anant Ambani Radhika Merchant Expensive Wedding Gifts : இந்தியாவின் பெரும் தொழிலதிபராகவும், பெரும் பணக்காரராகவும் விளங்குபவர், முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்-ராதிகா மெர்சன்டிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள், உலகின் டாப் தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

1000 கோடி செலவில் நடைப்பெற்ற திருமண கொண்டாட்டம்:

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி, பின்னர் காதலர்களாக மாறினர். இவர்களின் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளதை அடுத்து, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி, மூன்று நாட்கள் நடைப்பெற்றது. குஜராத்தில் உள்ள ஜாம்நகர் என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட்டின் டாப் ஸ்டார்கள் முதல், ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா வரை பலர் கலந்து கொண்டனர். 

பல ஆயிரம் பேருக்கு அன்னதானம், பல லட்சம் செலவில் விழாவிற்கான ஏற்பாடு என இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு இருந்தது, முகேஷ் அம்பானி வீட்டின் சுப காரிய நிகழ்வு. சாமனியன், தண்ணீரை கூட இந்த அளவிற்கு வாரி இறைத்து செலவு செய்ய மாட்டான், அந்த அளவிற்கு பணத்தை வாரி செலவு செய்தனர், அம்பானி வீட்டார். மொத்தம் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இந்த திருமண விழா காெண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் ஆச்சரியம் என்னெவன்றால், இந்த ஆயிரம் கோடி என்பது முகேஷ் அம்பானியின் சொத்தில் கால் பங்கு கூட இல்லை என்பதுதான். 

விலை உயர்ந்த பரிசுகள்…

ஆனந்த் அம்பானியின் திருமணம்தான், கடந்த சில நாட்களாக இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்த திருமணத்திற்கு எந்தெந்த பிரபலங்கள் வந்தனர், யார் யார் வரவில்லை, வந்தவர்களின் புகைப்படங்கள், அவர்கள் செய்த விஷயங்கள் என அனைத்தையும் மக்கள் தொடர்ந்து கூகுள் தேடுதளத்தில் தேடிக்கொண்டே இருக்கின்றனர். அனைவரும் வியந்து தேடும் இன்னொரு விஷயமும் உள்ளது. அதுதான், ஆனந்த் அம்பானிக்கு வந்த பரிசு பொருட்கள். 

மேலும் படிக்க | “அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க..” புதுச்சேரி சிறுமிக்காக கொதிக்கும் பிரபலங்கள்! என்ன நடந்தது?

முகேஷ் அம்பானியிடம் இல்லாததே இல்லை என்று அனைவரும் அறிவர். இவர் பெரும் பணக்காரர் என்றாலும், இவரது இல்லத்திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் பெரிய கைதான். இவர்களில் பலரும் என்ன கிஃப்ட் கொடுத்திருப்பர் என மக்கள் ஆச்சரியத்தில் இருந்தனர். அதை தீர்த்துக்கொள்ள, ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக கிடைத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை இங்கு பார்க்கலாம். 

யார் என்ன கொடுத்தார்கள்?

>பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான், ஆனந்த் அம்பானியின் திருமண பரிசாக 5.5 கோடி மதிப்புள்ள காரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 
>பாலிவுட்டின் ஃபேவரட் கப்புள்ஸ் ஆன ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ஆனந்த் அம்பானிக்கு வைரத்தால் ஆன இரண்டு க்ளட்ச்களை (பர்ஸ் போன்றது) பரிசாக வழங்கியுள்ளனராம்.
>சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு கடவுள்களின் சிலையை பரிசாக வழங்கியுள்ளனராம்.
>விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் வைர பிரேஸ்லைட்டை பரிசாக வழங்கியுள்ளனராம்.
>சல்மான் கான், உலகிலேயே விலை உயர்ந்த ஒரு கை கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளாராம். 
>அஜய் தேவ்கன் மற்றும் அவரது மனைவி கஜோல் சேர்ந்து ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்துள்ளனராம். 
>ஆனந்த் அம்பானியின் தந்தை முகேஷ் அம்பானி, தனது மகனுக்கு பெண்ட்லி காரிஅ பரிசளித்துள்ளாராம். அவரது மனைவி நீடா அம்பானி, மரகதத்தால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பாத்திரங்களை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

எண்ணிலடங்கா பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமண விழாவில் அவர்கள் பரிசாக கொடுத்துள்ள பொருட்களின் லிஸ்டும் எண்ணிலடங்காமல் உள்ளது. 

மேலும் படிக்க | அல்ல அல்ல குறையாத சொத்துகளை வைத்துள்ள ஆனந்த் அம்பானி! மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More