Home> India
Advertisement

ஓய்வூதியக்காரர்களுக்கு நற்செய்தி: ஆயுள் சான்றிதழ்களை Dec 31-க்குள் சமர்பிக்கலாம்!!

ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்தது.

ஓய்வூதியக்காரர்களுக்கு நற்செய்தி: ஆயுள் சான்றிதழ்களை Dec 31-க்குள் சமர்பிக்கலாம்!!

புது தில்லி: ஆயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆயுள் சான்றிதழ்களை (Life Certificate) சமர்ப்பிப்பதற்கான காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்தது.

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய பணியாளர், பொது குறைகளை, ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் (Jitendra Singh) தெரிவித்தார்.

முன்னதாக, ஓய்வூதியத்தின் (Pension) தொடர்ச்சிக்கு, இந்த சான்றிதழ்களை நவம்பர் மாதத்தில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்றிருந்தது.

ALSO READ:PMKSNY: பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என இந்த வகையில் பார்க்கலாம்!!

"80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில், ஓய்வூதியம் ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகளால் தடையின்றி வழங்கப்படும்" என்று அரசாங்க அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள COVID-19 தொற்றுநோய் மற்றும் முதியோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிங் கூறினார்.

வாடிக்கையாளரின் அடையாளத்தை நிறுவுவதற்கான ஒப்புதல் அடிப்படையிலான மாற்று முறையாக வீடியோ அடிப்படையிலான வாடிக்கையாளர் அடையாள செயலாக்கத்தை (V-CIP) அனுமதிக்கும் ஜனவரி 9, 2020 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) அறிவிப்பின் படி, ஓய்வூதிய விநியோக வங்கிகள் அந்த ஆய்வுகளை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளில் அவசரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு ஓய்வூதியதாரர்களிடமிருந்து ஆயுள் சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிமுறை செயல்படுத்தப்படும்.

ALSO READ: PM Kisan Scheme: 2 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவில்லையா? இந்த எண்ணை அழைக்கவும்!!

Read More