Home> India
Advertisement

₹2000 நோட்டின் புழக்கம் குறைந்தது ஏன்; மத்திய அரசு கூறுவது என்ன..!!

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என  அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு முடிவை அடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் ஆயின.

₹2000 நோட்டின் புழக்கம் குறைந்தது ஏன்; மத்திய அரசு கூறுவது என்ன..!!

 

புதுடெல்லி: தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புள்ள நோட்டு என்பது இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக இருந்தாலும் சந்தையில் இந்த நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பரில், சந்தையில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை,  336.3 கோடி இருந்த நிலையில்,  மார்ச் 2018  காலகட்டத்தில் இருந்து 223.3 கோடி நோட்டுகளாக  குறைந்தது.  தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75 சதவீதமாகவும், மதிப்பில் 15.11 சதவீதமாகவும் உள்ளது.

மாநிலங்கள் அவையில் அமைச்சர் அளித்த பதில்

மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நிதி பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் பேரில் சிறப்பு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட அரசு முடிவு எடுத்துள்ளது என்றார்.

"மார்ச் 31, 2018 நிலவரப்படி, 336.3 கோடி ரூபாய் நோட்டுகள் ரூ. 2,000 புழக்கத்தில் இருந்தன. இதன் எண்ணிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே 3.27 சதவீதம் மற்றும் 37.26 சதவீதம் ஆகும்," என்று அவர் கூறினார். அதனுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 26, 2021 நிலவரப்படி 223.3 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 

ALSO READ | Fake Note Alert: உங்ககிட்ட இந்த ரூ. 500 நோட்டு இருக்கா? முக்கிய தகவலை அளித்தது அரசு!!

2000 நோட்டுகள் புழக்கம் குறைந்ததன் காரணம்

2018-19-ம் ஆண்டிலிருந்து இந்த நோட்டுகளை அச்சடிக்க புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாததால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. இது தவிர, நோட்டுகள் (Rupee Note) அழுக்காகி/ சிதைந்து போவதால் அவையும் புழக்கத்தில் இல்லாமல் போகிறது.

மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளித்த இணை அமைச்சர், நாணயத்தின் தேவை பல காரணிகளைப் பொறுத்தது. பொருளாதார வளர்ச்சியில் இருந்து வட்டி விகிதம் வரை பல காரணிகள் இதில் அடங்கும் என்றார். 

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என  அரசு அறிவித்தது.  நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

இந்த பணமதிப்பிழப்பு முடிவை அடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் ஆயின. அதன் பிறகு புதிய 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் ஆயின. 

ALSO READ | pensioners: ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More