Home> India
Advertisement

குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள எகிப்து அதிபர் அப்துல் ஃபதா எல் சிசி!

குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் எகிப்து ராணுவத்தின் ஒரு குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது. 

குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள எகிப்து அதிபர் அப்துல் ஃபதா எல் சிசி!

குடியரசு தின அணிவகுப்பின் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சிசி இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியமான இருதரப்பு சந்திப்பை நடத்தினார். குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எகிப்தின் முதல் அதிபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் எகிப்து ராணுவத்தின் ஒரு குழுவும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளது. அவர் இந்தியா வருவது இந்தியாவுக்கு எதிரான வளைகுடா நாடுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இது நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்காது.

இந்தியாவிற்கான எகிப்து அதிபரின் பயணத்தை, பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) வரவேற்காது. அரபு நாடுகளில் இந்தியாவின் வலுவான உறவு நாடாக இருக்கும் நாடுகளில் எகிப்தும் ஒன்று. மேலும் அரபு நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்படாத நாடு எகிப்து. இந்நிலையில் அப்துல் ஃபதா அல் சிசி யார், உலகில் தனது நாட்டின் இமேஜை எப்படி மாற்றுகிறார், அவர் ஏன் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்வோம்.

யார் அந்த அப்துல் ஃபதா அல் சிசி?

அப்துல் ஃபதா அல்-சிசி 1954 நவம்பர் 19 அன்று கெய்ரோவின் கமலேயா பகுதியில் பிறந்தவர். அரசியலில் நுழைந்ததில் இருந்து, அவர் எகிப்தின் செல்வாக்குமிக்க தலைவராகக் கருதப்பட்டார். அதிபர் ஆவதற்கு முன்பு, சிசி எகிப்தின் இராணுவத் தளபதியாக இருந்தார். அவர் ஜூலை 2013 இல் ஜனாதிபதி முகமது மோர்சியை அகற்றினார். ஒரு வருடம் கழித்து அவரே எகிப்தின் அதிபரானார். 2014ல் எகிப்து அதிபரானார். 2018-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முன்னதாக 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் எகிப்து துணைப் பிரதமராகப் பணியாற்றியவர். 2012-13ல் எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

அப்துல் ஃபதா அல் சிசி 1977 ஆம் ஆண்டு எகிப்தின் மிலிட்டரி அகாடமியில் பட்டப்படிப்பை முடித்து ராணுவத்தில் சேர்ந்தார். இவர் இங்கிலாந்தின் பணியாளர் கல்லூரியில் படித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், பென்சில்வேனியா இராணுவக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

மேலும் படிக்க | Republic Day: குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்ன? இதோ முழு விவரம்

உலகில் எகிப்தின் பிம்பம் எவ்வாறு மாறுகிறது?

வளைகுடா நாடுகள் ஒரு பிற்போக்கான எண்னம் கொண்ட நாடுகள் என உலகம் முழுவதும்  அறியப்படும் நிலையில்,  அவர் எகிப்தில் முற்போக்கான அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார். பாகிஸ்தான் மற்றும் OIC மூலம் இந்தியாவிற்கு எதிராக பல மோசமான பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போது, எகிப்து ஒருபோதும் ஆதரிக்கவில்லை. உலக மன்றங்களில் கூட இந்தியாவுக்கு எகிப்து தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்தியாவின் வலுவான உறவு நாடாக எகிப்து மாறி வருகிறது. இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆதிக்கம் செலுத்திய இடத்தில், அதிபர் அப்துல் ஃபதா அதை பெருமளவு குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | National Voters Day: தேசிய வாக்காளர் தினத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More