Home> India
Advertisement

நரேந்திர மோடியைக் கொல்லுங்கள் - பிரதமரை மிரட்டிய இ-மெயில் கண்டுபிடித்த NIA

பிரதமர் நரேந்திர மோடியைக் (PM Modi) கொல்ல போடப்பட்ட சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மின் அஞ்சல் வெளிவந்த பிறகு, பிரதமரின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக உள்ளன. 

நரேந்திர மோடியைக் கொல்லுங்கள் - பிரதமரை மிரட்டிய இ-மெயில் கண்டுபிடித்த NIA

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைக் (PM Modi) கொல்ல போடப்பட்ட சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ - NIA) நாட்டின் பிரதமரைக் கொல்லும்படி அச்சுறுத்தும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டு பிடித்துள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரி குறித்து விசாரிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகமும் எஸ்.பி.ஜி.க்கு (Special Protection Group) தகவல் அளித்துள்ளது.

டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, இந்த மின்னஞ்சலை ylalwani12345@gmail.com என்ற இ-மெயில் கணக்கிலிருந்து info.mum.nia@gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 8, 2020 சனிக்கிழமை அன்று அனுப்பப்பட்ட மின் அஞ்சல் ஆகும். இந்த மின் அஞ்சல் அனுப்பப்பட்ட நேரம் 1:34:06. அதில் அனுப்பப்பட்ட விவரங்கள் பார்க்கும் போது பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் போடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மின் அஞ்சல் வெளிவந்த பிறகு, பிரதமரின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக உள்ளன. மேலும் புலனாய்வுப் பணியகம் (ஐபி-Intelligence Bureau), என்ஐஏ ரா (National Investigation Agency), பாதுகாப்பு புலனாய்வு அமைப்புகள் இந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை செய்து வருகிறது. 

ALSO READ | 

விவசாயிகளுக்கு மோடி அரசின் மிகப்பெரிய பரிசு, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

தற்சார்பு இந்தியா உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்: PM Modi

சமீபத்தில், பிரதமர் மோடியை ஒரு மணி நேரத்திற்குள் தோட்டாக்களால் துளைப்பதாக ஒரு நபர் மிரட்டியதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இந்த வழக்கில், மாமுரா கிராமத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் (33) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்தார்.

Read More