Home> India
Advertisement

தீவிரமாகும் தென்மேற்குப் பருவமழை; 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

தீவிரமாகும் தென்மேற்குப் பருவமழை; 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதையொட்டி இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை இடுக்கி மாவட்டத்துக்கும், ஜூலை 19 வரை பட்டனம் திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கும் 20 ஆம் தேதி அன்று எர்ணாகுளத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இந்த தினங்களில் மிகக் கன மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 20 CM-கும் அதிகமான அளவில் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  அதை ஒட்டி இந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லற்குட்டி அணையின் மதகு திறக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர். பம்பை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Read More