Home> India
Advertisement

கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்!!

தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மேலும் பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதேசமயம் வாடகைக் கார்கள், லாரிகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. 

முழு அடைப்பு காரணமாக, பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் இன்று நடக்கவிருந்த தேர்வை தள்ளிவைத்துள்ளது. 

Read More