Home> India
Advertisement

Election Result: அதிகரிக்கும் காங்கிரஸின் உற்சாகம்! கர்நாடக தேர்தல் கணிப்புகளை மெய்யாகுமா?

Karnataka Election Result 2023: 114 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்

Election Result: அதிகரிக்கும் காங்கிரஸின் உற்சாகம்! கர்நாடக தேர்தல் கணிப்புகளை மெய்யாகுமா?

கர்நாடக மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் 114 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கிறது. 114 இடங்களில் முன்னிலை பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான போக்கு தொடர்ந்தால், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். அதிகரிக்கும் காங்கிரஸின் உற்சாகம்! கர்நாடக தேர்தல் கணிப்புகளை மெய்யாகுமா?

ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூரு நகருக்கு வந்து விட வேண்டும்: காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

கட்சித்தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் பெறும் வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு கர்நாடகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14-ந் தேதி காலை 6 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | Election Result 2023: 224இல் எத்தனை காங்கிரசுக்கு? பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகள்?

கர்நாடக தேர்தலில் அதிகரிக்கும் காங்கிரஸின் உற்சாகம் 
 புதன்கிழமை நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வந்த பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் மூலம், இந்த கணிப்பு சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதுமே, ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் மிகவும் முன்னேறியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த காங்கிரஸ், ராகுல் காந்தியின் வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. 

'நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஆம், வெற்றி நமதே.' என்று ராகுல் காந்தியின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கபட்டுள்ளது. 

காங்கிரஸ் பகிர்ந்த வீடியோ பாரத் ஜோடோ யாத்ரா. இந்த 50 வினாடி வீடியோவில், பின்னணியில் ஒரு இசை கேட்கப்படுகிறது. ’இன்று என்னை யாராலும் தடுக்க முடியாது’ என்ற வார்த்தைகள் பின்னணியில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | Karnataka Election Result 2023 Live: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை அப்டேட்

முன்னதாக, கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்காக 'கண்ணியமான மற்றும் திடமான மக்கள் சார்ந்த பிரச்சாரத்தை' நடத்தியதற்காக கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ராகுல் காந்தி புதன்கிழமை நன்றி தெரிவித்தார். தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை 'பாபர் ஷேர்' என்று வர்ணித்த ராகுல் காந்தி, 'முற்போக்கான எதிர்காலத்திற்காக' வாக்களிக்க வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

புதன்கிழமை வாக்குப்பதிவு முடிந்ததும் ராகுல் காந்தி ட்விட்டரில், 'கண்ணியமான மற்றும் திடமான மக்கள் சார்ந்த பிரச்சாரத்தை நடத்தியதற்காக பாபர் ஷேர் தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னேற்றமான எதிர்காலத்திற்காக அதிக எண்ணிக்கையில் வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி.

காங்கிரஸ் வாக்குறுதிகள்
மாநிலத்தில் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 உத்தரவாதங்களை அமல்படுத்துவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் (கிரஹ ஜோதி) திட்டம், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கு ரூ 2,000 மாதாந்திர உதவி (கிரக லட்சுமி) திட்டம், ஒவ்வொரு பிபிஎல் குடும்ப உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி (அன்ன பாக்யா) திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும். .

மேலும் படிக்க | கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More